Kitchen Cuts
Greetings, Upto 20% Offer available. Use Coupon Code NEW22
Pincode
+91 7598 30 3000

Nethili / Anchovy / நெத்திலி

Share :

 

நெத்திலி எண்ணெய் நிறைந்த மீன் வகையாக இருப்பதால் இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது நெத்திலி மீன்கள். இந்த மீன் புரதத்தால் நிறைந்து இருப்பதால் பெரியவர்களை விட வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு சத்து மிகுந்த உணவு.நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், வைட்டமின்கள் ஈ, டி, வைட்டமின் பி நியாஸின் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும்.

ஆரோக்கியத்துக்கு அவசியமான கால்சியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நெத்திலி மீனில் நிறைந்துள்ளன. இது புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும்.இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவாகவும் வைட்டமின்கள் ஏராளமாகவும் நிறைந்துள்ளன. நெத்திலி மீனில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து.